திரு.வி.க.
அரசு கலைக்கல்லூரியில் பட்டமேற்பு விழா
திருவாரூர்
திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியின் பட்டமேற்பு விழா அண்மையில் திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி வளாகத்தில்
நடைபெற்றது.
கல்லூரி
முதல்வர் முனைவர் சு.வெங்கட்ராமன் தலைமை வகித்து உரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக
ஆட்சிக்குழு உறுப்பினரும் பேராவூரணி வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வருமான
முனைவர் வீ. இராஜகோபால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமேற்பு விழா உரையாற்றி
960 மாணவ மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகத் தரம் பெற்ற 58 மாணவர்களுக்கு
விழாவில் பதங்கங்கள் அணிவிக்கப்பட்டன.
விழாவில்
பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர் முனைவர் அ.ஜான் பீட்டர், துறைத் தலைவர்கள் முனைவர்
இராமநாதன் (வணிகவியல்), முனைவர் பி.சிவராமன் (வணிக நிர்வாகவியல்), முனைவர் நா.தனராஜன்
(தமிழ்), முனைவர் வீ.விவேகானந்தம் (வரலாறு), முனைவர் அ.அறிவொளி (வேதியியல்) பேரா.பி.ராஜாராமன்
( விலங்கியல் ) பேரா.சௌந்திரராஜன் (கணினி அறிவியல்), முனைவர் ச.அழகன் (ஆங்கிலம்), முனைவர்
சு.பென்னி அன்புராஜ் (இயற்பியல்), முனைவர் மோனிக்கா ஹெப்சிபா புஷ்ப பாய் (இதழியல் மற்றும்
மக்கள் தகவல் தொடர்பியல்), முனைவர் ஜெபகுமார் ( காட்சிவழி தகவல் தொடர்பியல்), பேரா.ம.நாகேந்திரன்
(பொருளாதாரம்), பேரா சண்முகவடிவு (கணிதம்) முனைவர் தர்மராஜ் (தாவரவியல்) ஆகியோர் கலந்து
கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை
கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக