சனி, 19 பிப்ரவரி, 2011

தீபாவளி - சிறுவர் பாடல்


தீப ஒளித் திருநாளைக் கொண்டாடுவோம்
தித்திக்க வாழ்த்துக்களைப் பகிர்ந்திடுவோம்
புத்தாடை உடுத்தி நாமும் மகிழ்ந்திடுவோம்
பட்டாசை விழிப்புடனே வெடித்து மகிழ்வோம்

கூட்டமான இடங்களிலே வெடிக்காதீர்கள்
வீட்டுக்குள்ளூம் வெடிமத்தாப்பு கொளுத்தாதீர்கள்
பாதுகாப்பு ரொம்பத் தேவை மறக்காதீர்கள்
திறந்தவெளிப் பகுதிகளில் வெடித்துப்பாருங்கள்

பல வெடிகள் ஒரே நேரம் வெடிக்க வேண்டாம்
சத்தம் மிகுந்த பட்டாசை கொளுத்த வேண்டாம்
வெடிக்காத பட்டாசை தொடுதல் வேண்டாம்
வெடி மருந்தை கையாலே தொடுதல் வேண்டாம்

வயதானோர் குழந்தைகள் நோயாளிகள்
பயந்திடும் வகையிலே வெடிக்காதீர்கள்
கண்களிலே தீப்பொறிகள் படநேரலாம்
குனிந்தவாறு பட்டாசை பற்றவைக்காதீர்

தீக்காயம் ஏற்பட்டால் எரிச்சல் உண்டாகும்
குளிர் நீரை அதில் ஊற்றி எரிச்சல் போக்குங்கள்
காற்றோட்டம் வருவதை உறுதி செய்யுங்கள்
மருத்துவரை நாடியே மருந்து போடுங்கள்

ஆபத்தில்லா தீபாவளி கொண்டாடுவோம்
ஏழைக்கும் எளியோர்க்கும் பகிர்ந்து கொடுப்போம்
நாளெல்லாம் ஆடிப்பாடி மகிழந்திடுவோம்
கொண்டாட்டம் மகிழ்ந்திடவே நினைவில் நிறுத்துவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக